தேவையானவை:
பச்சரிசி மாவு- 250 கிராம்
முழு பயற்றம் பருப்பு- 200 கிராம்
தேங்காய்-1
பனை வெல்லம்- 300 கிராம்
கறுப்பு எள்- 25 கிராம்
ஏலக்காய்- 5
மஞ்சள் பொடி- அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு- தேவையானவை
செய்முறை:
முழு பயற்றம் பருப்பை வாசனை வரும்வரை கறுகாமல் வறுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி அதையும் சிவக்க வதக்கி எடுக்க வேண்டும். ஏலக்காய்த் தூள் செய்ய வேண்டும். பருப்பைத் தூளாக்க வேண்டும். பனை வெல்லத்தை நொறுக்கிப் போட்டு அதனுடன் அரை டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். வெல்லம் கரைத்து இளம் கப்பிப் பாகனாதும் பயற்றம் பருப்பு மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறிவிட வேண்டும்.
அடுத்து தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள் போட்டு கலந்து இறக்க வேண்டும். ஆறியதும் நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். பச்சரிசி மாவில் மஞ்சள் தூள், உப்புத்தூளைச் சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். நான்கைந்து பூரண உருண்டைகளாக ஒவ்வொரு முறையும் எடுத்து மாவில் தோய்த்தெடுத்து அப்படியே வாணலியில் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட வேண்டும். வெந்து சிவந்து மந்திரிக் கொத்து எண்ணெயில் மிந்தததும் எண்ணெயை வடித்து எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.