முகப்பு
மகளிர்மணி

ரவை உருண்டை

வெறும் வாணலியில் ரவையைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். ரவையையும், சர்க்கரையையும் தனித்தனியே நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

Updated On : 23 அக்டோபர், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:08 PM

தேவையான பொருள்கள்:

ரவை- 1 கிண்ணம்
சர்க்கரை- முக்கால் கிண்ணம்
நெய்- அரை கிண்ணம்
முந்திரிப் பருப்பு- 1 தேக்கரண்டி
திராட்சை- 1 தேக்கரண்டி
ஏலப்பொடி- 1 தேக்கரண்டி

செய்முறை: 

Advertisement

வெறும் வாணலியில் ரவையைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். ரவையையும், சர்க்கரையையும் தனித்தனியே நைஸாக அரைத்துக் கொள்ளவும். சிறிது நெய்யில் முந்திரி, திராட்சை பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும். நெய்யை உருக்கி அத்துடன் எல்லா சாமான்களையும் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கைகளில் நெய் தடவிக் கொண்டு சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.