ராம சேரி இட்லி (கேரளா)
அரிசிகள், பருப்பை ஒன்றாக ஊறவைத்து, வழுவழுவென அரைக்கவும். உப்பு சேர்த்து கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி- இட்லி அரிசி- தலா 1 கிண்ணம்
கறுப்பு உளுந்து- அரை கிண்ணம்
தேங்காய் எண்ணெய்- 8 மேசைக் கரண்டி
வெந்தயம்- 1 மேசைக்கரண்டி
பொடி செய்வதற்கு..:
சிவப்பு அரிசி- கால் கிண்ணம்
உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, தலா 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 4
கறிவேப்பிலை- 2 ஆர்க்குகள்
உப்பு- தேவையான அளவு
எள்- 1 மேசைக்கரண்டி
பெருங்காயம், சீரகம்- தலா கால் மேசைக்கரண்டி
செய்முறை:
Advertisement
அரிசிகள், பருப்பை ஒன்றாக ஊறவைத்து, வழுவழுவென அரைக்கவும். உப்பு சேர்த்து கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். வாணலியில் பொடி செய்ய கொடுத்துள்ள பொருள்களை வறுத்து, கரகரப்பாகப் பொடிக்கவும். குக்கரில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். ஒரு வாழை இலையில் தேங்காய் எண்ணெய் தடவி, இட்லி மாவை ஊற்றி, தோசை கனத்துக்கு தேய்த்து விடவும். இதன் மீது பொடியை பரவலாகத் தூவவும். மேலே கொஞ்சம் மாவு சேர்த்து அதன் மேல் அரை மேசைக் கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். கேரளத்தில் 'ராமசேரி' என்ற ஊரில் இது மிகவும் பிரபலம்.