ஸ்பாட் இட்லி (ஆந்திரம்)
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, பொடியாக அரித்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.
தேவையான பொருள்கள்:
இட்லி மாவு- 2 கிண்ணம்
வெங்காயம், தக்காளி- தலா 2
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள்- தலா 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- கால் மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி
செய்முறை:
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, பொடியாக அரித்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.
வாணலியை சூடாக்கி, 1 மேசைக்கரண்டி இந்த விழுது சேர்க்கவும், மேலாக 1 கரண்டி இட்லி மாவு சுற்றிலும் எண்ணெய் சேர்த்து, மூடி வைத்து அடுப்பை சிம்மில் வைக்கவும். மாவு வெந்ததும் எடுத்து பரிமாறவும். இதற்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை.