வெட்டிவேர் பொடி, நெல்லிப்பொடி, பன்னீர் சேர்த்து பசையாக்கி வியர்குரு இருக்கும் இடத்தில் தேய்த்து இரண்டு மணி நேரம் ஊறவிட்டு குளித்தால், சரியாகிவிடும்.
மாதுளம் பழச்சாறு, பன்னீர் இரண்டையும் சரிவிகிதம் சேர்த்து கண்களுக்குக் கீழ் தடவி, கண்ணுக்கு மேலே வெள்ளரி துண்டு வைத்துவிட்டு தூங்கினால் போதும். கண்கள் புதுப்பொலிவுறும்.
பால் காய்ச்சும்போது வரும் ஏடு எடுத்து, அதில் நெல்லிச்சாறு கலந்து உதட்டில் பூசினால் உதடுகள் சிவக்கும்.
கடலை மாவு, அரிசி மாவு ஆகியன ஒரு தேக்கரண்டி, பன்னீர் இரு தேக்கரண்டி, 2 சொட்டு ஆரஞ்சுச்சாறு கலந்து கழுத்துப் பகுதியில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து, கழுவினால் போதும். கருமை நிறம் நீங்கும்.
பேரீச்சம் பழங்களை தேனில் ஊற வைத்து, 20 நிமிடங்கள் கழித்து அரைக்க வேண்டும். இதை வைத்து பேஷியல் செய்து, மசாஜ் பண்ணுங்கள். பார்லரில் செய்ததுபோன்ற எபெக்ட் உண்டு.
வறண்ட சருமம் உள்ளவர்கள் பப்பாளி பழச்சாறு, அரை தேக்கரண்டி தேன், சிறிதளவு சந்தனத் தூள் கலந்து முகத்தில் பூசினால் ஜொலிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.