முளைகட்டிய தானிய சூப்
முளைகட்டிய பயறுகளை நன்றாக வேக வைக்கவும். பின்னர், மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு சேர்த்து போட்டு நன்கு அரைக்கவும்.
தேவையானவை:
முளைகட்டிய தானியங்கள் (பயறு, மொச்சை, சோயா உள்ளிட்டவை ) ஒரு கிண்ணம்
சிறிய வெங்காயம் (நறுக்கியது) 2 தேக்கரண்டி
உடைத்த பூண்டு 2, சீரகம்
மல்லி தனியா, மிளகு ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி தழை தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு ஒரு தேக்கரண்டி
தேங்காய்ப் பால் ஒரு கிண்ணம்
தயிர் அரை கிண்ணம்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முளைகட்டிய பயறுகளை நன்றாக வேக வைக்கவும். பின்னர், மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு சேர்த்து போட்டு நன்கு அரைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து, அரைத்த கலவையைப் போட்டு நன்றாக மனம் வரும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறையும் சேர்க்க வேண்டும்.அதை சற்று நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அடுப்பை சிறு தீயில் வைத்து, கலவையில் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர் அதை இறக்கி எலுமிச்சை சாறு, தயிரை சேர்த்து கொத்தமல்லி தழை தூவி சூடாக அருந்தலாம்.