முகப்பு
மகளிர்மணி

மூலபாகல் தோசை

அரிசி, ஜவ்வரிசி, அவல், உளுந்து, வெந்தயம்,  துவரம் பருப்பு ஒன்றாக ஊறவைத்து, உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:39 AM
பகிர்:

கர்நாடகத்தில் மூலபாகல் என்ற ஊரில் செய்யப்படும் ஸ்பெஷல் தோசை

தேவையான பொருள்கள்:

இட்லி அரிசி- 2 கிண்ணம்
வெண்ணெய்- 5 தேக்கரண்டி
ஜவ்வரிசி, அவல், உளுந்து- தலா கால் கிண்ணம்
வெந்தயம்- 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு- 2 தேக்கரண்டி
வேர்க்கடலை- 2 தேக்கரண்டி
சட்னிக்கு: மிளகாய் வற்றல்-4
பூண்டு-2 பல்
புளி- சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு மசால்- தலா கால் கிண்ணம்

செய்முறை: 

அரிசி, ஜவ்வரிசி, அவல், உளுந்து, வெந்தயம்,  துவரம் பருப்பு ஒன்றாக ஊறவைத்து, உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். வேர்க்கடலை, பூண்டு, மிளகாய் வற்றல், புளி தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும், வாணலியில் பெரிய தோசையாக ஊற்றவும். 2 தேக்கரண்டி சட்னியை பரவலாகப் பூசவும். மூடி வைத்து வேக வைக்கவும். இரண்டு நிமிடங்கள் ஆனவுடன் தோசையின் ஒரு பக்கம் எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு மசால், தலா 1 தேக்கரண்டி  வெண்ணெய் வைத்து மூடி மேலாக 1 தேக்கரண்டி வெண்ணெய் வைத்து சூடாகப் பரிமாறவும்.
 

முழு கட்டுரையைப் படிக்க →