முகப்பு
மகளிர்மணி

நீரு தோசை

அரிசி, அவலை சுத்தமாகக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். இத்துடன் தேங்காய்த் துருவல், உப்பு, சர்க்கரை சேர்த்து, நன்றாக அரைக்கவும்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:39 AM
பகிர்:

தேவையான பொருள்கள்:

இட்லி அரிசி- 2 கிண்ணம்
அவல்- அரை கிண்ணம்
தேங்காய்த் துருவல்- 1 கிண்ணம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
சர்க்கரை- அரை தேக்கரண்டி

செய்முறை: 

அரிசி, அவலை சுத்தமாகக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். இத்துடன் தேங்காய்த் துருவல், உப்பு, சர்க்கரை சேர்த்து, நன்றாக அரைக்கவும். 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து, கரைக்கவும். மாவை புளிக்க வைக்க வேண்டாம்.  சூடான வாணலியில் ரவா தோசை ஊற்றுவது போல், தூக்கி ஊற்றவும். ஒரு பக்கம் மட்டுமே சுட்டு எடுத்து சூடாகப் பரிமாறவும்.

மூலபாகல் தோசை கர்நாடகத்தில் மூலபாகல் என்ற ஊரில் செய்யப்படும் ஸ்பெஷல் தோசை.

முழு கட்டுரையைப் படிக்க →