முகப்பு
மகளிர்மணி

பென்னே தோசா

இட்லி அரிசி, உளுந்து, வெந்தயத்தை ஊறவைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:39 AM
பகிர்:

இதுவும் கர்நாடக ஸ்பெஷல்தான். பென்னே என்றால் வெண்ணெய் என்பது பொருள்.

தேவையான பொருள்கள்:

இட்லி அரிசி- 2 கிண்ணம்
உளுந்து- கால் கிண்ணம்
வெந்தயம்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
வெண்ணெய்- கால் கிண்ணம்
மிகப் பொடியாக அரிந்த வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், கோஸ்- 1 கிண்ணம்
மிளகாய்த் தூள்- 2 தேக்கரண்டி
இஞ்சி,  பூண்டு விழுது- 2 தேக்கரண்டி

செய்முறை: 

இட்லி அரிசி, உளுந்து, வெந்தயத்தை ஊறவைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். வாணலியில்  2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும், காய்கறிகள், உப்பு, மிளகாய்த் தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வாணலியில் மாவை பெரிய தோசையாக ஊற்றவும். காய்கறி கலவையை பரவலாகச் சேர்க்கவும்.  பிஸ்ஸாவில் சேர்ப்பதுபோல இதை எடுத்து வைக்கவும்.

மற்றொரு தோசை ஊற்றவும். 1 தேக்கரண்டி வெண்ணெய் தடவவும். தோசை வெந்ததும் காய்கறி வைத்த தோசை மேல் வைக்கவும். இதன் மேல் 1 தேக்கரண்டி வைத்து சூடாகப் பரிமாறவும்.

முழு கட்டுரையைப் படிக்க →