பொரி தோசை
இட்லி அரிசி, உளுந்து ஊறவைத்து, உப்பு சேர்த்து அரைக்கவும். அரிசிப் பொரியைக் கழுவி, தயிருடன் சேர்த்து, அரைக்கவும். எல்லாம் நன்றாகச் சேர்க்கவும். 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
தேவையான பொருள்கள்:
இட்லி அரிசி- 1 கிண்ணம்
அரிசி பொரி- 4 கிண்ணம்
உளுந்து - கால் கிண்ணம்
தயிர்- 1 கிண்ணம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
இட்லி அரிசி, உளுந்து ஊறவைத்து, உப்பு சேர்த்து அரைக்கவும். அரிசிப் பொரியைக் கழுவி, தயிருடன் சேர்த்து, அரைக்கவும். எல்லாம் நன்றாகச் சேர்க்கவும். 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் சிறிய தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் சேர்த்து திருப்பி வேக வைத்து எடுக்கவும். சூடான சாம்பாருடன் சாப்பிட அருமையாக இருக்கும்.