முகப்பு
மகளிர்மணி

இவர்கள் வாழ்வில்...

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

ஒரு பாட்டியின் கவலை!
"எனது எல்லாப் பேரப் பிள்ளைகளும் எப்படியாவது முன்னுக்கு வந்துவிடுவார்கள். என்றாலும், சதா கதை, கவிதை என்று எதையாவது கிறுக்கிக் கொண்டே அலையும் இந்த  ரவீந்திரநாத் (தாகூர்) தான் என்ன  ஆவானோ? என்று தினமும் கவலையாக இருக்கிறது!'' என்று அவரது பாட்டி தனது நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்தார்.
 

தாயின் விருப்பம்!
ஒருமுறை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரும் ஒன்றாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றிருந்தனர்.
யாருக்கு முதலில் பூஜை பிரசாதம் கொடுப்பது என்று கோயில் அர்ச்சகர் தயங்கினார்.
உடனே ஆறுமுக நாவலர், "ஐயா. தாயும் தந்தையுமானருக்கே முதலில் பிரசாதம் வழங்குங்கள்'' என்று பிள்ளையைக் காட்டினார்.
மகாவித்வான் இடைமறித்து,  "தாயும் தந்தையும்
விரும்புவது பிள்ளை ஆறுமுகனையே!  எனவே பிரசாதத்தை முதலில் அவருக்கே கொடுங்கள்'' என்றார்.  அர்ச்சகர் அதன்படியே செய்தார்.
-நெ.இராமகிருஷ்ணன்

பேச்சின் பாங்கு..!
திருமுருக கிருபானந்த வாரியார் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஒருமுறை நடைபெற்ற ஆன்மிகச் சொற்பொழிவில் பேசியதாவது:
"மனிதனும் ஒரு கால்நடைதானே! ஏன் மனிதனைக் கால்நடை எனக் குறிப்பிடுவதில்லை. விலங்குகள் மட்டும் காலால் மட்டும்தான் நடப்பன.
மனிதனோ மனநடை, நாநடை, ஒழுக்கநடை ஆகியன உடையவன். உதாரணமாக, "நடைதவறி' விட்டான் என்றால், கால் நடப்பதையா குறிக்கும். இல்லை. ஒழுக்க நடையைக் குறிப்பதுதான். அதன்பொருள்  "நாநடை' .  மனிதனின் பேச்சின் பாங்கு.''  என்றார்.
-உ.இராமநாதன்
 

முழு கட்டுரையைப் படிக்க →