அழகுக் குறிப்புகள்...
முகத்தில் வடியும் எண்ணெயை சல்பேட் இல்லாத கிளென்சர் கொண்டு கழுவலாம்.
முகத்தில் வடியும் எண்ணெயை சல்பேட் இல்லாத கிளென்சர் கொண்டு கழுவலாம்.
ரோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தைக் கழுவி, சருமத்தின் பி.ஹெச். அளவைப் பராமரிக்கலாம்.
களிமண்ணை மாஸ்க் செய்து வாரத்துக்கு ஒருமுறை முகத்தில் தடவி, சிறிதுநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் தங்குவதைக் குறைக்கலாம்.
Advertisement
Advertisement
ஆயில் இல்லாத, சருமத்தில் துளைகளை ஏற்படுத்தாத வகையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுவதால் பராமரிப்பு ஹைட்ரேஷன் அல்லது அழகுசாதன க்ரீம்களை பயன்படுத்தலாம்.
சருமத்தில் உள்ள இறந்த சருமத்தை அகற்ற எக்ஸ்போலியேசனை பயன்படுத்துவதால், இறந்த செல்களை நீக்குவதுடன் இது சருமத்தில் உள்ள துளைகளை மூட உதவும்.
டீ ட்ரீ எண்ணெயில், இயற்கை பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை இருப்பதால், சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பைக் கட்டுப்படுத்த உதவுவதுடன் மற்ற பாதிப்புகளைத் தடுக்க உதவுகிறது.
தயிர், எலுமிச்சைச் சாறு, தேனை கலந்து சருமத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் எண்ணெய் உறிஞ்சுவதுடன் சருமத்தில் உள்ள துளைகளை அடைக்க உதவும்.
அதிகப்படியான எண்ணெய் வழிவதைத் தடுக்க, ஆயில் இல்லாத மேக்கப்/ ஆயில் இல்லா அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தலாம்.
காய்கறிகள், பழங்கள், ஒமேகா 3, கொழப்பு அமிலங்களை நிறைந்த ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை எடுத்துகொள்வதால், சருமத்தில் எண்ணெய் வழிவதைக் கட்டுப்படுத்தலாம்.
அதிக அளவில் குடிநீரை அருந்துவதால், சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்கலாம். எனவே இது அதிக அளவில் எண்ணெய் வழிவதைத் தடுக்க உதவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.