பலாச்சுளை போளி 
மகளிர்மணி

பலாச்சுளை போளி

மைதாவை முதலில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெயைவிட்டு சிறிது மஞ்சள் பொடியைப் போட்டு தண்ணீர்விட்டு கெட்டியாக போளிக்குப் பிசைந்து வைத்துகொள்ள வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

பலாச்சுளை 10

தேங்காய்1

கடலைப் பருப்பு 250 கிராம்

வெல்லம் மைதா மாவு தலா 400 கிராம்

செய்முறை:

மைதாவை முதலில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெயைவிட்டு சிறிது மஞ்சள் பொடியைப் போட்டு தண்ணீர்விட்டு கெட்டியாக போளிக்குப் பிசைந்து வைத்துகொள்ள வேண்டும். பலாச்சுளைகளை இரண்டாக வைக்க வேண்டும். தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும்.

கடலைப் பருப்பு, தேங்காய், நறுக்கிய பலாச்சுளை, வெல்லத்தை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்க வேண்டும். அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து, அரைத்த விழுதைப் போட்டு கெட்டியாகக் கிளற வேண்டும். கொஞ்சம் ஆறியதும் சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். பின்னர், மைதா மாவை சிறிது எடுத்து உள்ளங்கையில் தட்டி உருட்டி வைத்துள்ள பூரணத்தை வைத்து, மூடி இலையில் தட்டி தோசைக் கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT