முகப்பு
மகளிர்மணி

பாட்டி வைத்தியம்

கீழாநெல்லி தைலத்தை பூசி குளிக்கத் தலைச்சுற்றல் குணமாகும்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 6:30 PM
சப்போட்டா - கோவைக்காய்
பகிர்:

கீழாநெல்லி தைலத்தை பூசி குளிக்கத் தலைச்சுற்றல் குணமாகும்.

கொன்றைப் பூக்களை அரைத்து மோரில் சாப்பிட சர்க்கரை நோய் குணமாகும்.

கோவைக்காய்களைத் தொடர்ந்து பயன்படுத்த சர்க்கரை நோய் கட்டுப்படும்.

சங்கிலை வேர்ப்பட்டை அரைத்து வெந்நீரில் குளிக்க பக்கவாதம் குணமாகும்.

சந்தனக்கட்டையை எலுமிச்சைச் சாறில் உரைத்து முகத்தில் பூசி வர வசீகரம் உண்டாகும்.

காட்டாமணக்கு குச்சியில் பல் துலக்க பல் ஆட்டம் காண்பது நின்றுவிடும்.

தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்க்க கண் ஒளி பெறும்.

சுரைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வர தொப்பை குறையும்.

முள்ளங்கிச் சாற்றை சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.

சப்போட்டா பழங்களைத் தினமும் சாப்பிட்டு வர தூக்கம் நன்றாக வரும்.

உப்புநீர் தொண்டை வரை படும்படி வாய் கொப்பளிக்க வேண்டும்.

பாதாம் பருப்பை வறுத்து சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவு பெறும்.

ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

முழு கட்டுரையைப் படிக்க →