பனிக்காலத்தில் இனிப்பு நிறைய சாப்பிடக் கூடாது.
சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் மாதிரியான நீர்க்காய்களைத் தவிர்க்க வேண்டும்.
உணவில் மிளகு, பூண்டு, இஞ்சி, புதினா, தூதுவளை ஆகியவற்றை அதிகம் சேர்க்க வேண்டும்.
குளிர்காலத்தில் பெண்கள் கூந்தலை அடிக்கடி ஷாம்பு வாஷ் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
குளிர்காலத்தில் இன்ஃபெக்ஷன் காரணமாக, சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்படலாம். அதற்கு குளிக்கும் நீரில் வேப்பம் பொடி , மஞ்சள் தூள் ஆகியவற்றை தலா ஒரு தேக்கரண்டி சேர்த்து குளிக்கலாம்.
உதடுகள் வெடிப்பு ஏற்படாமல் இருக்க, தேன், கிளிசரின், பீட்ரூட் சாறு, வாஸ்லைன் தடவலாம்.
குளிர்காலத்தில் உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிடுதல் அவசியமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.