செளசெள அல்வா  
மகளிர்மணி

செளசெள அல்வா

முதலில் சௌசௌவை நன்றாகக் கழுவி, தோல் சீவி, தேங்காய்த் துருவியில் துருவிக்கொள்ள வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

செளசெள - 4

பால் - 300 மில்லி

சர்க்கரை - 400 கிராம்

ஏலக்காய் - 4

முந்திரி - 10

நெய் - 300 கிராம்

செய்முறை:

முதலில் சௌசௌவை நன்றாகக் கழுவி, தோல் சீவி, தேங்காய்த் துருவியில் துருவிக்கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் சிறிது டால்டாவை விட்டு துருவலை வதக்க வேண்டும்.

வதக்கிய துருவலுடன் பாலை விட்டு ஒரு பாத்திரத்தில் சேர்த்து குக்கரில் வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து வெந்தக் கலவையை எடுத்து, அடி கனமான ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை சேர்த்துக் கிளற வேண்டும். அடிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதில் நெய்யை விட்டு, எல்லாம் சேர்ந்து கெட்டியாக வரும் வரை கிளற வேண்டும். ஏலக்காயைப் பொடித்துச் சேர்க்க வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் சமயம் முந்திரியை சிறுசிறு துண்டாக ஒடித்து, வறுத்துப் போட்டு கீழே இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு நாள்: தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

துலா ராசிக்கு சுபநிகழ்ச்சி: தினப்பலன்கள்

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

SCROLL FOR NEXT