மகளிர்மணி

வெஜிடபிள் ஸ்டஃப்ட்

தேங்காயை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு - அரை கிலோ

கத்திரிக்காய் - 400 கிராம்

சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 200 கிராம்

பொடி கருணைக்கிழங்கு - 200 கிராம்

தேங்காய் - ஒரு மூடி

கொத்தமல்லி - ஒரு கட்டு

கடலைமாவு - 2 மேஜை கரண்டி

தனியாப் பொடி - ஒரு மேஜை கரண்டி

சீரகப்பொடி - ஒரு மேஜை கரண்டி

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 8

மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

தேங்காயை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கடலை மாவு, தனியாப் பொடி, சீரகப்பொடி, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, பெருங்காயம் உள்ளிட்ட பொருள்களை ஒன்றாகச் சேர்த்து இரண்டு ஸ்பூன் எண்ணெயுடன் கலந்து கொள்ள வேண்டும்.

தோலை நீக்கிய கிழங்கு வகைகள், கத்தரிக்காய் ஆகியவற்றைக் கொத்துக் கொத்தாக நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, கலந்து வைத்திருக்கும் மசாலாவைக் காய்கறிகளின் இடைவெளிகளில் நிரப்ப வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் மசாலா நிரப்பிய காய்கறிகளை மெதுவாக அதில் இட்டு நன்றாக வதக்க வேண்டும். கவனமாக காய்கறிக் கலவை அடிப்பிடிக்காதவாறு வதக்கி, காய்கறிகள் வெந்த பிறகு இறக்கி வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: 9 போ் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் நிலையம் அருகே திருநங்கை தீக்குளிப்பு

தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்களில் தீவிர சோதனை

இலஞ்சியில் இளைஞா் விளையாட்டுத் திருவிழா தொடக்கம்

திருவள்ளூா்: வேப்பம்பட்டில் பிப். 8-இல் கம்மா சமூகங்களை ஒருங்கிணைக்கும் மாநாடு

SCROLL FOR NEXT