தும்பைப்பூ ரசம்
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் புளி கரைத்து ஊற்றி , உப்பு, மஞ்சள் துள் போடவும்.
கே. நாகலட்சுமி
தேவையான பொருள்கள்:
தும்பைப்பூ - ஒரு கைப்பிடியளவு
Advertisement
Advertisement
மிளகு, சீரகம் - தலா ஒரு மேஜை கரண்டி
சின்ன வெங்காயம் - 10
நாட்டு பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - 6 ஆர்க்குகள்
புளி - நெல்லிக்காயளவு
தக்காளி - 2
உப்பு -திட்டமாக
மஞ்சள் தூள் - கால் மேஜை கரண்டி
தாளிக்க:
எண்ணெய், நெய், கடுகு - தலா ஒரு மேஜை கரண்டி
குண்டு வரமிளகாய் - 1
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் புளி கரைத்து ஊற்றி , உப்பு, மஞ்சள் துள் போடவும். பின்னர் தக்காளியை நன்கு கசக்கி அதில் போடவும். பின் பூண்டு, வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலையை நசுக்கி சேர்க்கவும். நன்கு கொதிக்கவிடவும். கடைசியில் தும்பைப் பூவைப் போட்டு மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கி வைத்து உடனே தாளித்து ரசத்தை நன்கு மூடி விடவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.