தேவையான பொருள்கள்:
துருவிய கேரட்- ஒன்றரை கிண்ணம்
காய்ந்த மிளகாய்- 8
தனியா- 1 மேசைக்கரண்டி
பெருங்காயம்- தேவையான அளவு
கடுகு, புளி, உப்பு, எண்ணெய்- சிறிதளவு
வெந்தயம்- 1 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும். பிறகு அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கேரட்டை நன்றாக வதக்கவும்.
பின்னர், உப்பு, புளி சேர்த்து பச்சடி பதத்துக்கு கொரகொரப்பாக அரைக்கவும். தண்ணீர் வேண்டுமானால் சிறிது சேர்க்கவும். பின்னர், எண்ணெய்யை சூடாக்கி வெந்தயம், கடுகு தாளித்து பச்சடியில் கொட்டவும். சத்தான கேரட் பச்சடி தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.