மகளிர்மணி

அல்வா புட்டு

இட்லி அரிசியை நன்றாகக் களைந்து நான்கு மணி நேரம் ஊற வைத்து, மிக்சியில் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

சௌமியா சுப்பிரமணியன்

தேவையான பொருள்கள்:

இட்லி அரிசி - 1/2 கிண்ணம்

நெய் - 2 1/4 கிண்ணம்

தேங்காய்த் துண்டுகள் - 1/4 கிண்ணம்

தண்ணீர் - 750 மி.லி.,

வெல்லம்- 1 கிண்ணம்

ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை:

இட்லி அரிசியை நன்றாகக் களைந்து நான்கு மணி நேரம் ஊற வைத்து, மிக்சியில் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி தேங்காய்த் துண்டுகளை வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றியவுடன் வெல்லம் சேர்த்து கரைய வைத்து, கொதித்தவுடன் அரைத்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து மிதமான சூட்டில் வைத்து, தொடர்ந்து கைவிடாமல் 20 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும்.

மாவு நன்றாக இறுகி, கெட்டியான பதம் வந்ததும், அடுப்பை அணைத்து விடவும். ஒரு நெய் தடவிய தட்டில் சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து வைக்கவும். அல்வா புட்டு தயார். நெய் சேர்க்காமலே தொண்டையில் வழுக்கி கொண்டு போகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

90km/h வேகத்தில் வீசிய காற்று! சாய்ந்த Statue of liberty மாதிரி சிலை!

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கிய நிதீஷ் குமார்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

SCROLL FOR NEXT