குறள் பாட்டு: ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். -திருக்குறள் ஒழுக்கமாக வாழ்வது உயர்வும் சிறப்பும் தந்திடும் உயிரை விடவும் மேலாக ஒழுக்கம் போற்ற வேண்டுமே நல்ல பிள்ளை என்று ந
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
-திருக்குறள்
ஒழுக்கமாக வாழ்வது
உயர்வும் சிறப்பும் தந்திடும்
உயிரை விடவும் மேலாக
ஒழுக்கம் போற்ற வேண்டுமே
நல்ல பிள்ளை என்று
நாடு போற்ற வேண்டும்
நல்லவற்றைச் செய்தால்
நல்ல புகழ் சேரும்.