குறள் பாட்டு: பெரியாரைப் பிழையாமை
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. -திருக்குறள் செயலைச் செய்து முடிப்பவரைத் தூற்றாதிருக்க வேண்டுமே செய்யும் செயல் வெற்றிபெற பாராட்டி உரைக்க வேண்டுமே இடித்து இடித்துப் பேசினால் இ
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
-திருக்குறள்
செயலைச் செய்து முடிப்பவரைத்
தூற்றாதிருக்க வேண்டுமே
செய்யும் செயல் வெற்றிபெற
பாராட்டி உரைக்க வேண்டுமே
இடித்து இடித்துப் பேசினால்
இனிதாய் எதுவும் அமையாது
நான்றாய் எதுவும் அமைந்திட
இனிய சொற்கள் தேவையே!