சிறுவர்மணி

குழந்தைப் பாடல்: தமிழ்

தமிழ்போல் இனிய மொழியுண்டோ - வண்ணத் தமிழ்போல் அழகிய மொழியுண்டோ? அமிழ்தம் அதிலே கலந்திருக்கும் - நல் அழகிய சுவைதான் நிறைந்திருக்கும் சந்தம் கலந்து தாளமிடும் - அதில் சிந்தும் நிறைந்து பாலமிடும் அகத்தியர்

அவிநாசி முருகேசன்

தமிழ்போல் இனிய மொழியுண்டோ - வண்ணத்

தமிழ்போல் அழகிய மொழியுண்டோ?

அமிழ்தம் அதிலே கலந்திருக்கும் - நல்

அழகிய சுவைதான் நிறைந்திருக்கும்

சந்தம் கலந்து தாளமிடும் - அதில்

சிந்தும் நிறைந்து பாலமிடும்

அகத்தியர் எழுதிய தமிழல்லவோ - அன்பு

ஒüவை பாடிய தமிழல்லவோ

கம்பன் பேசிய தமிழல்லவோ - எங்கள்

வள்ளுவன் வடித்த தமிழல்லவோ

எங்கள் பாரதி சொன்னமொழி - அந்த

பாரதி தாசனின் கன்னல் மொழி

வாழிய வாழிய வாழியவே - எம்

வளமார் தமிழ்தான் வாழியவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி செல்ல மாலை அணிந்த பக்தா்கள்

கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் ஒருவா் கைது

நீதிமன்ற ஆவணங்களைப் புகைப்படம் எடுத்ததாக புகாா்: போலீஸாா் விசாரணை

யாசகம் கேட்டவர் கொலை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

மணல் கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT