குறள் பாட்டு: தீவினையச்சம்
(அறத்துப்பால் - அதிகாரம் 21 - பாடல் 2) தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். -திருக்குறள் தீய செயல்கள் வாழ்வினில் தீமையைத் திருப்பித் தந்திடும் பற்றவைத்த தீயைப் போல பற்றிப் பரவி எரிந்திடும்
(அறத்துப்பால் - அதிகாரம் 21 - பாடல் 2)
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
-திருக்குறள்
தீய செயல்கள் வாழ்வினில்
தீமையைத் திருப்பித் தந்திடும்
பற்றவைத்த தீயைப் போல
பற்றிப் பரவி எரிந்திடும்
தீயைப் போன்ற தீமைக்கு
அஞ்சி வாழ்தல் சிறந்ததே
தீமையில் கொண்டு தள்ளுவதே
தீய செயலின் தன்மையே!