முகப்பு
சிறுவர்மணி

தெரிந்து கொள்ளுங்கள்

சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு கடும் புயலின் முன்னறிவிப்பை அறிந்த மக்கள் பயந்து இந்தக்  கிராமத்தை விட்டு வேறொரு இடத்துக்குச் சென்றுவிட்டனர்.

Updated On : 2 மார்ச், 2013 at 10:50 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:09 PM

காலத்தால் அழியாத அதிசய கிராமம்!

ஸ்காரா பிரே. இது ஒரு கிராமத்தின் பெயர். ;!ஸ்காட்லாந்துக்கருகில் உள்ளது. சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு கடும் புயலின் முன்னறிவிப்பை அறிந்த மக்கள் பயந்து இந்தக்
 கிராமத்தை விட்டு வேறொரு இடத்துக்குச் சென்றுவிட்டனர். ஆனால் புயல் அக்கிராம வீடுகளின் மேற்கூரைகளை மட்டும் சூறையாடிவிட்டு, வீட்டினுள் இருந்த பொருட்கள், சுவர்கள் ஆகியவற்றுக்கு எந்தவித சேதங்களையும் உண்டாக்காமல் வீடுகளை மணலால் மூடிவிட்டது.
 புயல் மணலால் மூடியது அதிசயமல்ல. அதைவிட அதிசயம், இந்த மணல் சிறை மறைந்த விதம்!
 1851-ஆம் ஆண்டு வீசிய புயல் ஒன்று ஸ்காரா பிரே கிராமத்தை மணல் சிறையிலிருந்து விடுவித்தது. ஆம், இந்தப் புயலின் போது மணல் அனைத்தும் தூக்கியெறியப்பட்டு மறைந்திருந்த கிராமம் வெளிச்சத்துக்கு வந்தது.
 இக்கற்கால வீடுகள் சிமெண்ட் போன்ற சேர்ப்புப் பொருள் ஏதுமில்லாமல் முழுக்க முழுக்க கற்களாலேயே (அதாவது கல்லால் ஆன பாளங்களால்) கட்டப்பட்டிருந்தன.
 வீடுகளுக்கிடையே குறுகலான சந்துகள் காணப்பட்டன. ஒவ்வொரு வீடும் சுமார் 20 அடி பக்க அளவு உடையது. ஒவ்வொரு வீட்டினுள்ளும் சமையலறை, கல் அலமாரிகள், உறங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட மேடைகள், கழிவுப் பொருள் வெளியேற்ற வசதிகள் ஆகியவை காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.