சிறுவர்மணி

தேசியக் கொடிக்கு மரியாதை!

தேசியக்கொடியை சூரியோதயத்தின்போது பறக்கவிட்டு, சூரியன் மறையும் நேரத்தில் இறக்க வேண்டும்.

எஸ்.மாரியப்பன்

* தேசியக்கொடி வணக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

* தேசியக்கொடியை சூரியோதயத்தின்போது பறக்கவிட்டு, சூரியன் மறையும் நேரத்தில் இறக்க வேண்டும்.

* தேசியக்கொடியைக் கொடிக்கம்பத்தில் ஏற்றும்போது அதிவேகமாக செயல்பட வேண்டும்.

* கொடியை இறக்கும்போது நிதானமாக செயல்பட வேண்டும்.

* வீடுகளின் பால்கனிகள், கட்டிட வராந்தாக்கள் போன்றவற்றிலிருந்து பறக்க விடும்போது கொடிக்கம்பத்தின் நுனியில் காவி நிறம் இருக்க வேண்டும்.

* சிலைகள், நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றைத் திறந்துவைக்கும்போது தேசியக்கொடியை முதலில் பறக்கவிட வேண்டும்.

* சிலைகளை தேசியக்கொடியால் மூடக்கூடாது.

* தேசியக்கொடியை கம்பத்திலிருந்து கீழே இறக்கிய பின்பு "சல்யூட்' செய்யக்கூடாது.

* சவப்பெட்டிகளில் உபயோகிக்கும்போது சடலத்தின் தலைபாகத்தில் காவி நிறம் அமைய வேண்டும்.

* விளம்பரங்களுக்கு தேசியக்கொடியை பயன்படுத்தக்கூடாது.

* மிகவும் அழுக்கடைந்த, கிழிந்த, நைந்து போன கொடிகளைத் தீயிலிட்டு சாம்பலாக்கிவிட வேண்டும்.

* சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் காந்தி ஜெயந்தி தினங்களில் கொடியை எங்கும் பறக்கவிடலாம்.

* பிறநாட்டுக் கொடிகளுடன் நமது கொடியை பறக்க விடும்போது வலப்புறம் ஓரத்தில் இருக்குமாறு செய்ய வேண்டும.

* வேற்று நாட்டுக் கொடிகளை வரிசையமைப்பில் அகரவரிசைப்படி பறக்கவிடவேண்டும்.

* ஒரு கம்பத்தில் இரண்டு கொடிகளைப் பறக்கவிடக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT