முகப்பு
சிறுவர்மணி

உலகப் பெருந்தோட்டம்!

உலகத்தில் காணப்படும் தாவரங்களில் பெரும்பாலானவற்றைக் கொண்டது "கியூ'(ஓஉர) தோட்டம்! இது லண்டன் நகருக்கு அருகாமையிலுள்ள "கியூ' என்னும் இடத்தில் அமைந்துள்ளதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது!

Updated On : 25 ஜூலை, 2015 at 3:10 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:34 AM

உலகத்தில் காணப்படும் தாவரங்களில் பெரும்பாலானவற்றைக் கொண்டது "கியூ'(ஓஉர) தோட்டம்! இது லண்டன் நகருக்கு அருகாமையிலுள்ள "கியூ' என்னும் இடத்தில் அமைந்துள்ளதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது!

தாவரச் சேமிப்புத் தோட்டங்களில் உலகில் இதுவே முதன்மை வகிக்கிறது! 300 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. இத்தோட்டம் விதவித நிறங்களையும் பல்வேறு மணங்களையும் கொடையாக அளித்துக் கொண்டிருக்கிறது!

இத்தோட்டத்தில் காட்டுத்தாவரங்கள் 25,000 க்கு ஹேஸ்ரீமற்பட்டுக் காணப்படுகின்றன. மனிதன் பயிர் செய்யும் தாவர இனங்களே பலப்பல ஆயிரமாகும். இத்தோட்டத்தில் நடைபெற்று வருகின்ற தாவர ஆராய்ச்சி, உலகம் முழுமைக்கும் பயன்பட்டு வருகிறது!

Advertisement

மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் அன்னையாரான "அகஸ்டா' என்பவரால் இத்தோட்டம் 200 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது! அப்போது இதன் கெüரவ இயக்குனராகப் பணியாற்றிய "ஸர் ஜோசப் பாங்ஸ்' என்பவரே இத்தோட்ட வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டு உழைத்தவர்! இவர் மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் ஆதரவோடு உலகின் பல பாகங்களிலிருந்தும் தாவரங்களைக் கொண்டுவந்து சேர்த்தார்!

புது நாடுகள் கண்டுபிடிக்கச் சென்றவர்களுடன் ஜோசப் பாங்ஸýம் சென்று ஆயிரக் கணக்கான தாவர இனங்களைக் கண்டுபிடித்து இத்தோட்டத்தைச் செழுமைப்படுத்தினார். தொடங்கிய காலந்தொட்டு இன்று வரையிலும் இத்தோட்டம் தாவர ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்பட்டு வருகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.