படாடோபம்!
அமெரிக்காவில் பிரபலமான ராஜதந்திரியும் வக்கீலுமான ஜான்கோநாட் என்பவரிடம் ஒருநாள் ஒரு படாடோபமான இளைஞர் வந்தார்.
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:17 AM
அமெரிக்காவில் பிரபலமான ராஜதந்திரியும் வக்கீலுமான ஜான்கோநாட் என்பவரிடம் ஒருநாள் ஒரு படாடோபமான இளைஞர் வந்தார். வக்கீல் அதிக வேலையாக இருந்தபடியால் அவரை ஒரு நாற்காலியில் உட்காரும்படி கூறினார். ஆனால் இளைஞர் ஆத்திரப்பட்டுக்கொண்டு ""நான் பிளாங் பாதிரியாருடைய மகன்' என்று சொன்னார்.
""அப்படியானால் இரண்டு நாற்காலிகளில் உட்காருங்களேன்!'' என்று வக்கீல் சொன்னார்.