முகப்பு
சிறுவர்மணி

பயம் ஏதும் இல்லை!

"டி.எல்.மூடி' ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை உடைய கிறித்தவர். ஒருமுறை அவர் பயணம் செய்த கப்பல் முழுகும்படியான ஆபத்து ஏற்பட்டது!

பகிர்:

"டி.எல்.மூடி' ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை உடைய கிறித்தவர். ஒருமுறை அவர் பயணம் செய்த கப்பல் முழுகும்படியான ஆபத்து ஏற்பட்டது! அவருடன் பயணம் செய்த பயணிகள் அனைவரின் முகத்திலும் மரணபயம் தெரிந்தது! ஆனால் "மூடி' கப்பலின் ஒரு மூலையில் அமர்ந்து கர்த்தரைத் துதித்துப் பாடிக்கொண்டிருந்தார். பயணிகள் ஆச்சரியப்பட்டு,""உங்களுக்கு பயமே இல்லையா?'' என்று கேட்டனர். அதற்கு அவர், ""கப்பல் கரையை அடைந்தால் நான் என் மகள் வீட்டுக்குச் சென்று மகிழ்வேன்...,கப்பல் கவிழ்ந்தாலோ கடவுளிடம் சென்று ஆனந்தமடைவேன்...,எனக்கு பயம் ஏதுமில்லை! என பதிலளித்தார்!

கடவுளின் கிருபையால் அனைவரும் கரை சேர்ந்தனர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.