முகப்பு
சிறுவர்மணி

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

Updated On : 7 ஜனவரி 2017, 12:00 am IST
பகிர்:

* உற்சாகமாக இருக்கத் தொடங்குவது எல்லாம் வெற்றிகரமான வாழ்க்கையே.
* அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
* உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.
* கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது.
* தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடம் ஒருபோதும் நம்பிக்கை வைக்க முடியாது.
* உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள். பின்பு உலகமே உங்கள் வசமாகும்.
* ஒருவனுக்குத் துன்பம் விளைவித்துவிட்டு நீங்கள் சுகமாயிருந்துவிட முடியாது.
-ந.பரதன், ஏரல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.