சிறுவர்மணி

நினைவுச் சுடர்!: செயல்!

பல்கலைக் கழக மாணவர் விடுதின் சமையல் அறை.  ஜன்னல்கள் நீண்ட நாட்கள் துடைக்கப்படாமல் இருந்தன. அதனால் சமையல் அறை இருட்டாக இருந்தது. 

மீனாட்சி சுந்தரம்

பல்கலைக் கழக மாணவர் விடுதின் சமையல் அறை.  ஜன்னல்கள் நீண்ட நாட்கள் துடைக்கப்படாமல் இருந்தன. அதனால் சமையல் அறை இருட்டாக இருந்தது. 

ஒருமுறை அந்தப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சமையல் அறையைப் பார்வையிடச் சென்றார். சமையல் அறை இருட்டாயிருந்ததையும், அழுக்கும் தூசும் நிறைந்திருந்ததையும் கண்டார். சமையலறைப் பொறுப்பாளரை அழைத்தார். ஜன்னல் கண்ணாடிகளை நன்றாகத் துடைக்குமாறு சொல்லிவிட்டுச் சென்றார்.

மறுநாள் துணைவேந்தர் சமையலறைக்குச் சென்று பார்த்தபோது ஜன்னல் கண்ணாடிகள் துடைக்கப்பட வில்லை. முன்பு போலவே இருந்தது. சமையலறை இருண்டு காணப்பட்டது! துணை வேந்தருக்குக் கடும் கோபம்! ஆனால் அவர் சத்தமிடவில்லை. எந்த வார்த்தையாலும் தன் கோபத்தை வெளிப்படுத்தவில்லை. வேகமாக அறையை விட்டு வெளியே  சென்றார்!.... ஒரு வெள்ளைத் துணியைக் கொண்டுவந்தார்.  தாமே ஒரு ஜன்னல் கண்ணாடியில் தண்ணீர் விட்டு அழுத்தித் துடைத்தார்! கண்ணாடி பளிச்சென்று சுத்தமாகியது! அறைக்குள் வெளிச்சம் நிரம்பியது! இருள் விலகியது! பிறகு எதுவும் பேசாமல் எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டுப் போய்விடடார். 

பதறிப்போன சமையலறை ஊழியர்கள் ஆளுக்கொரு துணியை எடுத்துக்கொண்டனர்! மீதியுள்ள கண்ணாடி ஜன்னல்களை அழுத்தித் துடைத்தனர்! அறையில் ஒளி நிரம்பியது! 

மறுநாள் துணைவேந்தர் வந்தபோது சமையலறை மிகச் சுத்தமாகப் பளிச்சென்றிருந்தது! துணைவேந்தர் புன்னகைத்தார்!

சோம்பல் என்பதும் ஒரு மன அழுக்குதான்! அதைத் தன் செயல் மூலம் துடைத்துவிட்ட அந்தத் துணைவேந்தர்தான் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் "ஜாகீர் ஹுசைன்!'.... அகமும் புறமும் தூய்மையானது!

(அறிஞர்கள் வாழ்வில்.... என்ற நூலிலிருந்து....)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT