இயேசுவின் வழி நடப்போம்!
கருணை என்பது அவர் முகம்!கண்களில் தீப ஒளிச் சுடர்!பொறுமை என்பது அவர் வழி!
கருணை என்பது அவர் முகம்!
கண்களில் தீப ஒளிச் சுடர்!
பொறுமை என்பது அவர் வழி!
பொல்லாதவர்க்கும் நல்லவர்!
மக்களுக்கானப் பணி செய்தார்!
மாளாக் கொடுமை அனுபவித்தார்!
மக்களை நல்வழிப் படுத்திடவே
மலைப்பிரசங்கம் பல செய்தார்!
சாட்டையினாலே அடித்தனரே!
சாகும் வரையில் சிலுவையிலே
ஏற்றியே அவரை வதைத்தனரே!
ஏற்றே சிரித்தார் இயேசுவுமே!
""பாவச் செயலை நீக்கிடுங்கள்....
பாவிகள் திருந்திட மன்னியுங்கள்!.....
பாவம் போக்குவார் கர்த்தர்...'' என
பரிவுடன் கூறி உயிர் நீத்தார்!
அன்பு கருணை காட்டிடுவோம்!
ஆறுதல் சொல்லித் தேற்றிடுவோம்!
என்றும் அமைதி காத்திடுவோம்!
இயேசு காட்டிய வழி நடப்போம்!