* உண்மையை நேசியுங்கள்....தவறை மன்னியுங்கள். - வால்டேர்
* உன் அச்சத்தை உன்னிடம் வைத்துக்கொள்.... உன் ஊக்கத்தை மட்டும் பிறரிடம் பகிர்ந்து கொள்! - விவேகானந்தர்
* ஒருவருடைய நடத்தைதான் நண்பர்களையோ...., அல்லது விரோதிகளையோ உருவாக்குகிறது. - சாணக்கியன்
* கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்!.... தாமதப்படுத்துங்கள்!.... அதுவே உண்மையான வீரம்! - எல்.ஏ.செனிதா
* அன்பு இல்லாதவன் ஒரு போதும் கடவுளை அடைய மாட்டான்! -- விவேகானந்தர்
* அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சுபவர்கள்,.... அஞ்ச வேண்டியவைக்கு அஞ்சாதவர்கள் ஆகியோர் தவறானக் கொள்கைகளைத் தழுவி தீய பாதையில் செல்கிறார்கள். - புத்தர்
* புத்தகசாலையில் அதிக நேரத்தைச் செலவிடுபவர்கள் பெரிய முதலீட்டைச் செய்கிறார்கள். - இறையன்பு
* பவவீனமானவன்தான் அடிக்கடி கோபம் கொள்வான். - சாணக்கியன்
* விளக்கில் எரியும் சுடராய் இருப்பாய்!.... அப்போதுதான் மற்ற விளக்குகளை ஏற்றி வைக்கலாம்! - இரவீந்திர நாத் தாகூர்
* பேச்சினால் பின்னர் வருந்த நேருகிறது..... மெüனத்தினால் ஒரு போதும் அப்படி நேருவதில்லை. - திரு.வி.கல்யாணசுந்தரனார்
தொகுப்பு : சஜி பிரபு மாறச்சன், சரவணந்தேரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.