முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

பிறருக்கு உரியதை பிறருக்கே அளிப்பதில் இடைவிடாமல் காட்டும் ஆர்வமே நீதி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:


பிறருக்கு உரியதை பிறருக்கே அளிப்பதில் இடைவிடாமல் காட்டும் ஆர்வமே நீதி.  
-  ஜஸ்டினியன்

மன்னிப்பைவிட எதிரிகளை உறுத்தக்கூடியது வேறு எதுவும் இல்லை. தாராளமான அன்புடன் மன்னிக்கப்பட்ட எதிரிகள் தரமான நண்பர்களாக மாறி
விடுகின்றனர்.

பிறப்பால் மனிதர்கள் சமமானவர்கள்தான். ஆனால் அறநெறிதான் மனிதர்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனப் பிரித்துக் காட்டுகிறது.  
-  வால்டேர்

உலக வரலாற்றைப் படிப்பதைவிட, உலகில் வரலாறு படைப்பதே அதிக இனிமையை உருவாக்குகிறது.  
-  ஜவாஹர்லால் நேரு

நல்ல செயல்களில் சந்தோஷப் பூக்கள் மலர்கின்றன. 
- காவ்ரீவ்

சிறப்பாகச் செயல்படும் திறமையும், வாய்ப்பும் இருந்தும் செய்யாமல் இருக்
கின்றவன் சரியான சோம்பேறி.  
-  சாக்ரடீஸ்

தனக்குத்தானே கட்டும் கல்லறைக்கு மற்றொரு பெயர் சோம்பல்!  
-  ஜெரோமி டெய்லர்

பிரச்னைகளை சந்தியுங்கள்! தீர்வு பிரகாசிக்கும்! 
- என்.ஹில்

தோல்வி மனப்பான்மையை அகற்றிவிட்டு, அதே இடத்தில் வெற்றி மனப்பான்மையை விதையுங்கள்.  
-  ஸ்வார்ட்ஸ்

உங்களை நீங்களே மிஞ்ச வேண்டும். வாழ்க்கை முழுவதும் இதுவே உங்கள் வேலையாக இருக்கட்டும்!  
-  கிறிஸ்டினா 

(ஸ்வீடன் அரசி)

முழு கட்டுரையைப் படிக்க →