அச்சம் தவிர்!
தேர்வு அச்சம் என்ற ஒன்றுதுளியும் இல்லை எனக்கே!
தேர்வு அச்சம் என்ற ஒன்று
துளியும் இல்லை எனக்கே!
ஆர்வம் கொண்டே அறிந்து பயின்றால்
அச்சம் இல்லை நமக்கே!
ஐயம் அகற்றி அனைத்துப் பாடம்
அன்றைக் கன்று படித்துவிட்டால்
கையும் தேர்வை நன்றாய் எழுதும்
கைமேல் வெற்றி தானாய் வருமே!
தேர்வுக் காலம் நெருங்கும் காலம்
தெரியாப் பகுதி தேர்ந்து கற்பாய்!
நேர்ந்த ஐயம் நீக்க என்றும்
நம்மா சிரியர் உள்ளார் மறவாய்!
Advertisement
அறிவை வளர்க்கத் தானே நாமும்
ஏற்ற கல்வி பயிலு கின்றோம்!
அறிந்து கொண்டால் இதனை மனதில்
அச்சம் நீக்கி ஊக்கம் பெறுவோம்!