முகப்பு
சிறுவர்மணி

தெரியுமா?

"வில்லியம் ஹில்' என்ற பத்திரிகை ஆசிரியர் தனது 14ஆம் வயதில் இருந்து 90ஆவது வயது வரை ஒருநாள் விடாது டைரி எழுதியிருக்கிறார்.

Updated On : 29 அக்டோபர், 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:44 AM


"வில்லியம் ஹில்' என்ற பத்திரிகை ஆசிரியர் தனது 14ஆம் வயதில் இருந்து 90ஆவது வயது வரை ஒருநாள் விடாது டைரி எழுதியிருக்கிறார்.  இந்த டயரிகள் தென் ஆப்பிரிக்காவில் உள்ள விட்வாடர்ஸ்டாண்டு பல்கலைக்கழகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த பிரான்சில் கால்ரன் என்பவர்,  ஒரு பத்திரிகையை வாசித்தபோது  கைரேகையைப் பற்றி கட்டுரையை படித்தார்.  பின்னர், அவர் பத்து ஆண்டுகள் கைரேகையைப் பற்றி ஆராய்ச்சி செய்து,  "ஒருவரது கைரேகையைப் போல் மற்றொருவரது கைரேகை இருப்பதில்லை' என்பதைக் கண்டறிந்தார். இதைப் பின்பற்றிதான் உலக நாடுகளில் உள்ள காவல் துறையினர் கைரேகையைப் பயன்படுத்தி, குற்றவாளிகளைப் பிடிக்கின்றனர்.

பிரபலங்கள் பறவைகளையும், விலங்குகளையும் வளர்த்தனர்.  அப்படி சிலர் வளர்த்த விவரம்: அலெக்சாண்டர் டூமாஸ் மயில், அக்பர் சிறுத்தை, சார்லி சாப்ளின் கிளி, செங்கிஸ்கான் பருந்து, தாமஸ் ஜெபர்சன் வானம்பாடி.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.