ஞாயிறு கொண்டாட்டம்

டிப்ஸோ டிப்ஸ்

எறும்புத் தொல்லைக்கு வெள்ளரிக்காயின் தோல்களை சீவி எறும்பு புற்றின் அருகில் வைத்தால் போதும். ஆடையில் ஒட்டியுள்ள சுவிங்கம்மை எடுக்க ஆடையை குளிர்சாதனப்பெட்டியில் உள்ள ஃப்ரீஸரில் ஒருமணி நேரம் வைத்துப் பின

டி.ஆர். விஜயராகவன்

எறும்புத் தொல்லைக்கு வெள்ளரிக்காயின் தோல்களை சீவி எறும்பு புற்றின் அருகில் வைத்தால் போதும்.

ஆடையில் ஒட்டியுள்ள சுவிங்கம்மை எடுக்க ஆடையை குளிர்சாதனப்பெட்டியில் உள்ள ஃப்ரீஸரில் ஒருமணி நேரம் வைத்துப் பின் துவைக்க வேண்டும்.

வென்னீரில் அரை எலுமிச்சம்பழத்தை வெட்டிப் போட்டு அதில் ஊற வைத்துத் துவைத்தால் வெள்ளைத் துணிகள் பளிச்சிடும்.

எலுமிச்சம்பழத்தில் இருந்து அதிக ஜூûஸப் பெற பழத்தை ஒருமணி நேரம் வென்னீநீரில் போட்டு பின் பிழியவும்.

முட்டைக்கோஸில் உள்ள வாசனை போக அதனை வேகவைக்கும்போது சிறிது பிரட் துண்டை அதில் போட்டுவிட்டால் போதும்.

வெங்காயம் உரிக்கும்போது கண்ணில் இருந்து கண்ணீர் வராமல் இருக்க வாயில் சுவிங்கம் மெல்லலாம். அல்லது மின்விசிறியின் கீழ் இருந்து உரிக்கலாம்.

ஆடையில் இருக்கும் பேனா மையைப் போக்க கரைகளின் மீது டூத்பேஸ்டைத் தடவி, அது காய்ந்த பின் துவைக்க வேண்டும்.

வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை எளிதில் உரிக்க, வேக வைத்த உடன் குளிர்நீரில் போட்டுவிட வேண்டும்.

எலித்தொல்லையில் இருந்து விடுபட மிளகுத்தூளை தூவினால் போதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊராட்சி பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் புதிய வாக்காளா் சோ்க்கை முகாம்

அரசு பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி

சாலைகள் மேம்படுத்தும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT