ஞாயிறு கொண்டாட்டம்

பெரிய பட்ஜெட்

ஹோம்பாலே பிலிம்ஸ்  பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் படம் "கே ஜி எஃப் சாப்டர் 2'.

DIN

ஹோம்பாலே பிலிம்ஸ்  பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் படம் "கே ஜி எஃப் சாப்டர் 2'. இந்த படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 -ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் . ஆர். பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

இதனையடுத்து பெங்களூரூவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் "கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக  யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ்ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கெளடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

"கே ஜி எஃப் 2'  படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய சினிமாவில் பெரிய பட்ஜெட் படத்தை வெளியிடுவது எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த கெளரவம்' என்கிறார் நிறுவன தயாரிப்பாளர் எஸ். ஆர் பிரபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

அஞ்சனக்கண்ணி... அனுமோல்!

SCROLL FOR NEXT