ஞாயிறு கொண்டாட்டம்

நல்லா காரசாரமா சாப்பிடுங்க..!

உடல் பருமன் குறைய பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டபோதிலும்,  பலரின் முயற்சி வெற்றி அடைவதில்லை.

ஆர்.சுந்தரராஜன்

உடல் பருமன் குறைய பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், பலரின் முயற்சி வெற்றி அடைவதில்லை.

உணவு கட்டுப்பாடு,  உடல் பயிற்சிகளைத் தவிர,  மனிதர்களின் வளர்சிதை மாற்றம் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேகமான வளர்சிதை மாற்றம் உடல் எடையை எளிதில் குறைக்க உதவுகிறது. ஏனெனில் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருந்தால் ஓய்வில் கூட கலோரிகளை எரிக்க உதவுகிறது. மறுபுறம், மெதுவான வளர்சிதை மாற்றம் உள்ளவர்கள் சிறிது எடையைக் குறைக்க கூட போராட வேண்டி இருக்கலாம்.

இருப்பினும், சில எளிய முறைகள் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை எளிதாக அதிகரிக்கலாம். தண்ணீர் குடிப்பது முதல் எடை தூக்குவது வரை, உங்கள் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்த உதவும்  வழிமுறைகள் பல உள்ளன. அதில், உணவுமுறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது.  ஒருவரின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கு பல உணவுகள்  அறியப்படுகின்றன.

இதுதொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர்  என்மாமி அகர்வால்,  வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் ஒரு குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது:

""காரமான உணவுகளைச் சாப்பிடுவது சிறந்த எடை இழப்புக்கு நீங்கள் பயன்படுத்தக் கூடிய தந்திரங்களில் ஒன்றாகும்.  காரமான உணவுகள் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகின்றன. குறிப்பாக மிளகாயில் காணப்படும் கேப்சைசின் என்ற கலவை வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடையை குறைக்க உதவுகிறது.

உண்ணும்போது, காரமான உணவுகள் தற்காலிகமாக இதயத் துடிப்பை அதிகரிக்கலாம். வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்கும். இருப்பினும், ஒப்பீட்டளவில் தனிநபர்களின் உடல் தனமை பொறுத்து இந்த அளவு மாறுபடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.  வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது என்பது கடினமானது அல்ல; நீங்கள் அதில் யோசித்து உணவு வகைகளை உண்டு, உடற்பயிற்சிகளை செய்தால் அது எளிது.காரமான உணவுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். சிறந்த எடை இழப்பு முடிவுகளுக்கு ஊட்டசத்துமிக்க உணவு, வழக்கமான உடற்பயிற்சி, பிற ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களுடன் எளிதாகும்'' என்கிறார்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சில ஆலோசனைகள்:
 போதுமான அளவு புரத உணவைச் சாப்பிட வேண்டும்.
நாள் முழுவதும் போதுமான தண்ணீரைக் குடிக்க வேண்டும்
உடல் பயிற்சி செய்வது உடல் எடையைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவும்
உடற்பயிற்சிகளின் தீவிரத்தை அதிகரிக்க முயற்சிக்கவும்.
நல்ல தூக்கத்தைப் பெறுவதும் விரைவான வளர்சிதை மாற்றத்துக்கான வழிகளில் ஒன்றாகும்.  எனவே ஒவ்வொரு இரவும் குறைந்தது 8 மணிநேரம் தூங்குங்கள்.
இரவு உணவைத் தவிர்ப்பது உடல் பருமன் குறையும் என்பது தவறான கருத்து.  உணவுகளை தவிர்ப்பதால்,  கூடுதல் கலோரிகளை எரிக்கப்படாமல்  தக்க வைத்திருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாக்-அப் மரணம் அல்ல!காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்!நடந்தது என்ன?காவல் ஆணையர் பேட்டி!

உத்தரகண்ட் நிலச்சரிவில் 150 பேர் உயிருடன் மீட்பு, 11 ராணுவ வீரர்கள் மாயம்!

6.41 லட்சம் பேருக்கு வேலை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

காஸாவின் கோரம்! பசி மரணங்கள் 200-யை எட்டியது! இதில் 90 பேர் குழந்தைகள்!!

உத்தரகாசி பேரிடர்! வெள்ளத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்து அதிசய மனிதர்!

SCROLL FOR NEXT