முதியவர்  
ஞாயிறு கொண்டாட்டம்

வாழ்க்கை வாழ்வதற்கே...

ஒரு பிரபல விடுதியில் பல பிரபலங்கள் வருகை தந்திருக்கின்றனர். அப்போது ஒரு முதியவர் கையில் ஒரு கைத்தடியுடன் மெதுவாக மேடைக்கு வந்து, தனது இடத்தில் அமர்ந்தார்.

த.நாகராஜன்

ஒரு பிரபல விடுதியில் பல பிரபலங்கள் வருகை தந்திருக்கின்றனர். அப்போது ஒரு முதியவர் கையில் ஒரு கைத்தடியுடன் மெதுவாக மேடைக்கு வந்து, தனது இடத்தில் அமர்ந்தார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார்.

'இப்போதும் நீங்கள் மருத்துவரிடம் அடிக்கடி செல்வீர்களா?'

முதியவர் சிரித்தவாறு, 'ஆமாம் அடிக்கடி போவேன்!' என்றார்.

'ஏன்?'

'நோயாளிகள்தான் மருத்துவரைப் பார்வையிட வேண்டும். இல்லையென்றால் அவர் எப்படி உயிரோடிருப்பார்'

(அரங்கத்தில் இருந்தோர் கைகளைத் தட்டினர்.)

'அப்படியானால் நீங்கள் மருந்துக் கடைக்கும் செல்வீர்களா?'

'நிச்சயமாகச் செல்வேன். மருந்துக்கடைக்காரர்களும் வாழ வேண்டும் அல்லவா?'

(அரங்கத்தில் கைத்தட்டல் பலமாக ஒலித்தது)

தொகுப்பாளர் சிரித்துகொண்டே, 'அப்படியென்றால் மருந்தையும் குடிப்பீர்களா?' என்றார்.

இதற்கு முதியவர் சிரித்தவாறே, 'அது வேண்டாம். பெரும்பாலும் அந்த மருந்துகளைத் தூக்கி எறிந்துவிடுவேன். ஏனெனில் நானும் பிழைத்தே ஆக வேண்டுமே.'

(அரங்கத்தில் சிரிப்பொலி)

'இந்தப் பேட்டிக்கு வந்ததற்கு நன்றி..'

'அதற்கு என்ன நன்றி. நீங்களும் வாழ வேண்டும் அல்லவா?'

'வாட்ஸ் ஆஃப் குழுவிலும் செயல்படுகிறீர்களா?'

'ஆமாம். கொஞ்சம், கொஞ்சமாகச் செய்திகளை அனுப்பிக் கொண்டே இருப்பேன். அப்போதுதான் அனைவருக்கும் நான் உயிருடன் இருப்பதாக உணர முடியும். இல்லையென்றால், குழுவில் இருந்து வெளியேற்றி விடுவார்களே..?'

இந்த நகைச்சுவை வேடிக்கையான நகைச்சுவையாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் எல்லோரும் வாழ வேண்டும்.

அன்பான நண்பர்களே. சிரித்துகொண்டே இருங்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதை மக்கள் தொடர்ந்து அறிந்துகொள்ள வேண்டும். உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும்...! வாழ்க்கை இருந்தால் உயிரோட்டமும் இருக்க வேண்டும்!

(படித்ததில் பிடித்தது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விலை உயர்ந்த வாக்குரிமையைத் திருட அனுமதிப்பதா? பிரியங்கா

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT