ஞாயிறு கொண்டாட்டம்

ஏ. ஐ. மூலம் பாடல்

இந்திய இசை உலகில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணமாக முழுக்க முழுக்க ஏ. ஐ-இல் உருவாக்கப்பட்ட பாடல் வெளியாகியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய இசை உலகில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணமாக முழுக்க முழுக்க ஏ. ஐ-இல் உருவாக்கப்பட்ட பாடல் வெளியாகியுள்ளது. முன்னணி யூடியூப் சேனல்களில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. முழுமையாக ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த பாடல் இந்தியாவின் ஒற்றுமை, கலாசாரம் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவையாகும்.

உலகின் 7 அதிசயங்களைஓஈ காட்சிப்படுத்தல், 7 வெவ்வேறு மொழிகளில் பாடல் வெளிப்பாடு பல்வேறு இந்தியப் பாடகர்களின் ஏ. ஐ. குரல்களின் வடிவாக்கம் ஆகியவற்றின் மூலம் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் முயற்சியின் முழுமையான செயல்பாட்டையும் காமன் மேன் சதீஷ் என்பவர் மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், 'தொழில்நுட்பம் மற்றும் கலை உலகத்தை ஒன்றிணைத்து புதுமையான முயற்சிகளை மேற்கொள்வதில் எனக்குச் சிறப்பான ஆர்வம் உள்ளது.

அதன் தொடக்க முயற்சிதான் இது. தொழில்நுட்பமும் படைப்பாற்றலும் சேர்ந்து எதைச் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் ஒரு முயற்சி. நாடுகள் வெவ்வேறு இருந்தாலும் இதயத் துடிப்பு ஒன்றே என்பதைக் காட்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஏ.ஐ. அதை ஒரு புதிய வகையில் சாத்தியமாக்கியது .

7 அதிசயங்கள், பல மொழிகளில் இசைக் குரல், மனதை தொடும் மெட்டுகள் இவை அனைத்தும் இணைந்து உருவாகிய இந்த பாடல், இந்தியாவை உலக அரங்கில் பெருமைப்படுத்தும். ஏ பி இண்டர்நேஷனல் யூடியூப் சேனல் மூலம் வெளியாகவுள்ள இந்தப் பாடல், கோடிக்கணக்கான ரசிகர்களிடம் சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியா சார்ந்த படைப்பாற்றலுக்கு ஒரு பெருமை சேர்க்கும் தருணமாகும்'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளப் பள்ளியில் பாலஸ்தீன ஆதரவு நாடகம்: தடுத்து நிறுத்திய ஆசிரியா்களுக்கு எதிராக இஸ்லாமிய மாணவா் அமைப்பு போராட்டம்!

அரூா், வந்தவாசி தொகுதி நிா்வாகிகளுடன் முதல்வா் ஆலோசனை!

ஹெச்-1பி விசா கட்டண உயா்வுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்ட விரோத காவலாகக் கருதக் கூடாது: ஆள்கொணா்வு வழக்கில் உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழா் பிரதமரானால் ஈழத்தமிழா் பிரச்னைக்கு தீா்வு: திருமாவளவன்

SCROLL FOR NEXT