தமிழ்மணி

மயங்கொலிச் சொற்கள்

(ண, ன பொருள்  வேறுபாடு)  அணல் - தாடி, கழுத்து  அனல் - நெருப்பு  அணி - அழகு  அனி - நெற்பொறி  அணு - நுண்மை  அனு - தாடை, அற்பம்  அணுக்கம் -  அண்டை,  அண்மை.  அனுக்கம் - வருத்தம், அச்சம்  அணை -  படுக்கை,  

தினமணி

(ண, ன பொருள்

 வேறுபாடு)

 அணல் - தாடி, கழுத்து

 அனல் - நெருப்பு

 அணி - அழகு

 அனி - நெற்பொறி

 அணு - நுண்மை

 அனு - தாடை, அற்பம்

 அணுக்கம் -

 அண்டை,

 அண்மை.

 அனுக்கம் - வருத்தம், அச்சம்

 அணை -

 படுக்கை,

 அணைத்துக்

 கொள்ளுதல்

 அனை - அன்னை, மீன்

 அணைய - சேர, அடைய

 அனைய - அத்தகைய

 அண்மை - அருகில்

 அன்மை - தீமை, அல்ல

 அங்கண் - அவ்விடம்

 அங்கன் - மகன்

 அண்ணம் - மேல்வாய்

 அன்னம் -

 சோறு,

 அன்னப்பறவை

 அண்ணன் - தமையன்

 அன்னன் - அத்தகையவன்

 அவண் - அவ்வாறு

 அவன் -

 சேய்மைச் சுட்டு,

 ஆண்மகன்

 ஆணகம் - சுரை

 ஆனகம் - துந்துபி

 ஆணம் - பற்றுக்கோடு

 ஆனம் - தெப்பம், கள்

 ஆணி -

 எழுத்தாணி,

 இரும்பாணி

 ஆனி -

 தமிழ் மாதங்களுள்

 ஒன்று

 ஆணேறு -ஆண்மகன்

 ஆனேறு - காளை, எருது

 ஆண் - ஆடவன்

 ஆன் - பசு

 ஆணை - கட்டளை, ஆட்சி

 ஆனை - யானை

 இணை - துணை, இரட்டை

 இனை - இன்ன, வருத்தம்

 இணைத்து - சேர்த்து

 இனைத்து - இத்தன்மையது

 இவண் - இவ்வாறு

 இவன் -

 ஆடவன்,

 (அண்மைச் சுட்டு)

 ஈணவள் - ஈன்றவள்

 ஈனவள் - இழிந்தவள்

 உண் - உண்பாயாக

 உன் - உன்னுடைய

 உண்ணல் - உண்ணுதல்

 உன்னல் - நினைத்தல்

 உண்ணி -

 உண்பவன்,

 ஒருவகைப் பூச்சி

 உன்னி - நினைத்து, குதிரை

 ஊண் - உணவு

 ஊன் - மாமிசம்

 எண்ண - நினைக்க

 என்ன - போல, வினாச்சொல்

 எண்ணல் - எண்ணுதல்

 என்னல் - என்று சொல்லுதல்

 எண்கு - கரடி

 என்கு - என்று சொல்லுதல்

 ஏண் - வலிமை

 ஏன் -

 வலிமை,

 ஒரு வினைச்சொல்

 ஏணை - தொட்டில்

 ஏனை - மற்றது

 ஐவணம் - ஐந்து வண்ணம்

 ஐவனம் - மலை நெல்

 ஓணம் - ஒரு பண்டிகை

 ஓனம் - எழுத்துச்சாரியை

 (சொற்கள் வளரும்...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! மகாத்மா காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

SCROLL FOR NEXT