திருவள்ளுவர் மொத்தம் 11 நூல்களை எழுதியுள்ளார். இதற்குச் சான்றுகள் அவர் எழுதிய நூல்களிலேயே உள்ளன. திருக்குறள்தான் அவர் எழுதிய முதல் நூல். அதன் பிறகு வரிசையாக ஞானவெட்டி-1500, நவரத்தின வைத்திய சிந்தாமணி-800, பஞ்சரத்தினம்-500, கற்பம்-300, சூத்திரம்-108, நாதாந்த திறவுகோல்-100, குருநூல்-51, முப்பு சூத்திரம்-30, வாத சூத்திரம்-16, முப்பு குரு-11 ஆகிய பத்து நூல்களையும் இயற்றியுள்ளார்.
÷சித்தர்களின் அரிய கலைகளாகிய வாதம், வைத்தியம், யோகம், ஞானம், சாகாக்கலை பற்றயும்; உயிர், உடல், ஆன்மா இம்மூன்றையும் கட்டும் ஒரே மருந்து முப்பு என்றும், அம்மருந்தை எப்படிச் செய்வது என்பது குறித்தும் தம்முடைய நூல்களில் எழுதியுள்ளார்.
÷வாதசூத்திரம் 16-பாடல் 3; முப்பு குரு 11-பாடல் -2; போன்றவற்றில் விளக்கியுள்ளார். வள்ளுவர் யாரிடம் தமிழ் கற்றார் என்பதை, "பொதிகை முனியான, கும்பமுனி அகத்தியர்தாம் தமக்கு ஞானகுரு என்றும், அவருடைய ஆசியால்தான் திருக்குறள் எழுதியதாகவும், தமது ஞானவெட்டி-1500, 165-ஆவது பாடலிலும், பல பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளார். அப்பாடல் வருமாறு:
""பொதிகை மேவு மகத்தீசரா லெனது
போத ஞான தமிழ் வாக்கியம்
மதி விளங்கும் ரவிச் சுடர் பதம் ரவி
மலர் பொழிந்து தொழு தோதினான்
விதியிருந்து மதி பாலுணர்ந்து
விழி சுழியறிந்து தமிழ் பொழியவும்
பதிய ஞான பரிபூரணத்தினடி
பாத பொற்கமலம் பணிகுவாம்!''
திருக்குறளைத் தவிர பிற நூல்களையும் திருவள்ளுவர் இயற்றியுள்ளார் என்பதை மேற்குறிப்பிட்ட நூல்களிலுள்ள பாடல்கள் வழி
அறியமுடிகிறது.
-டி.அமிர்தராஜன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.