பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்ஆற்றா(து) அவர் அழுத கண்ணீர் அவைஅவர்க்குக்
தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்
மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்
ஆற்றா(து) அவர் அழுத கண்ணீர் அவைஅவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும். (பாடல்-166)
குடிப்பிறப்பால் தீய செயல்களை உடையவர், ஒரு துணையும் இல்லாதவர், வறுமையுடையார், சொற்களால் பகைவரை ஒத்தார் என்றிங்ஙனம் நினைத்து, குடிப் பிறப்பு, துணை, செல்வம் முதலிய வலிமை உடையார் அவையிலாரை நலிந்த இடத்து, தாங்க இயலாது அவர்கள் தங்கண்களினின்றும் பரப்பிய கண்ணீராகிய அவையே தம்மை நலிந்த அவர்க்குக் கூற்றாய் விழாநிற்கும். "ஆற்றாது அவர் அழுத கண்ணீர் அவை அவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்துவிடும்' என்பது பழமொழி.