தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி


அறிவன்று அழகன்று அறிவதூஉம் அன்று
சிறியர் எனப்பாடும் செய்யும் - எறிதிரை
சென்றுலாம் சேர்ப்ப! குழுவத்தார் மேயிருந்த
என்றூடு அறுப்பினும் மன்று. (பாடல்-207) 


காற்றினாலே மோதி எறியப்படும் அலைகள் கரைமேற் சென்று உலவிக் கொண்டிருக்கும் கடற்கரைகளுக்கு உரிய தலைவனே! சூரியனையே ஊடறுத்துச் சென்றாலும் செல்லலாம். ஆனால், அறிஞர்கள் கூடியிருக்கிற அவையை ஊடறுத்துப் போகவே கூடாது. அப்படிப் போவது அறிவுடைமையும் அன்று; பிறந்த குடிக்கு அழகும் அன்று;  அறநெறியின்பாற் பட்டதும் அன்று. கீழ்மக்கள் என்று சொல்லப்படுகின்ற சொல்லையே அது கொண்டு வரும். "குழுவத்தார் மேயிருந்த என்றூடு அறுப்பினும் மன்று' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT