என் நெஞ்சம் இடிபட்டதே!
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட சிவபெருமானின் திருவிளையாடலை புதுக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது இப்பாடல்.
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட சிவபெருமானின் திருவிளையாடலை புதுக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது இப்பாடல்.
"நான்மாடக் கூடலாம் மதுரையில் வைகை ஆற்றுக்குக் கரையெடுக்கச் சென்று இறைவன் பொன்னான மேனி புண் கொள்ளுமாறு அடிபட்ட செய்தியை ஆயிரம் ஆண்டுகள் கழித்துக் கேட்கும் எனக்கே நெஞ்சில் இடி இறங்கியது போல் இருக்கிறதே... தமக்காக இறைவன் அடிபட்ட நிகழ்வை நேரில் கண்ட வாதவூரரான மாணிக்கவாசகரின் நெஞ்சம் எவ்வளவு துடித்திருக்குமோ?' என்று வாதவூரரைப் பாடுகிறது இப்பாடல். வள்ளலாரின் அந்தத் திருவருட்பாப் பாடல் இதுதான்:
"வன்பட்ட கூடலில் வாள்பட்ட
வையை வரம்பு இட்டரின்
பொன்பட்ட மேனியில் புண்பட்ட
போதில் புவி நடையாம்
துன்பட்ட வீரர்அந்தோ வாத வூரர்தம்
தூய நெஞ்சம் என்பட்டதோ?
கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே!
(கோவை எழிலனின் "உள்ளம் படர்ந்த நெறி' நூலிலிருந்து)