வெள்ளிமணி

உயர்ந்த எண்ணங்களே உயர்வை அளிக்கும்! 

மனித எண்ணங்கள் வலிமை வாய்ந்தவை. நேர்மறை எண்ணங்கள் நல்ல விளைவுகளையும் எதிர்மறை எண்ணங்கள் தீய விளைவுகளையும்

DIN

மனித எண்ணங்கள் வலிமை வாய்ந்தவை. நேர்மறை எண்ணங்கள் நல்ல விளைவுகளையும் எதிர்மறை எண்ணங்கள் தீய விளைவுகளையும் கொடுக்கின்றன. அதனால் தான் நம் முன்னோர்கள் எப்பொழுதுமே நல்லதையே நினைக்கச் சொன்னார்கள்.
நம் நினைவுகளை தேவன் அறிந்திருக்கிறார். பரிசுத்த வேதாகமத்தில் "என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்'' (சங்கீதம் 139:2) என்று தாவீது கூறுகிறார்.
நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிரோம் என்பது உண்மை. நாம் பணக்காரராக வேண்டும் என்று முழு மனதோடு நினைத்தால் ஒரு நாள் பணக்காரராக ஆகி விடுவோம். நோயாளியாக கற்பனை செய்துக் கொண்டு வாழ ஆரம்பித்தால், ஒரு நாள் நோயாளியாகப் போவதும் உறுதி.
எனவே நம் எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. நம் எண்ணங்கள், சந்தோஷங்கள், துக்கங்கள் எல்லாமே உங்கள் ஆழ் மனதில் பதிந்து விடுகின்றன. நீங்கள் அடிக்கடி எண்ணும் எண்ணங்கள் நல்லவைகளாக, நேர்மறை எண்ணங்களாக இருந்தால் நல்ல விளைவுகளே நமக்குத் திரும்பக் கிடைக்கும். அடிக்கடி எண்ணும் எண்ணங்கள் தீயவைகளாக, எதிர்மறை எண்ணங்களாக இருந்தால் கெட்ட விளைவுகளே வரும். 
ஒரு விலை உயர்ந்த காரை, ஒரு சிறுவன் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். இதைப்பார்த்த அந்த காரின் உரிமையாளர், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்டார். பின்னர் அவர், அச்சிறுவனை அந்த காரில் உக்காரவைத்து சிறிது தூரம் ஓட்டினார்.
பின்னர் அவரிடம் அச்சிறுவன், "உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது, என்ன விலை? எனக் கேட்டான். அவரோ, ""தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது'' என்றார்.
"அப்படியா!! அவர் மிகவும் நல்லவர்'' என சிறுவன் சொன்னான். உடனே அந்த காரின் உரிமையாளர், "நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா?'' என்றார்.
அந்தச் சிறுவன் சொன்ன பதில் அவரை ஆச்சரியப்பட வைத்தது. சிறுவன் சொன்ன பதில் என்ன தெரியுமா? ""நான் அவ்வாறு நினைக்கவில்லை, உங்களுக்கு கார் பரிசளித்த உங்களின் சகோதரனைப்போல் நான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றான்.
ஆம், நம்முடைய நினைவுகள்கூட அவ்வாறே உயர்ந்தவையாக இருக்க வேண்டும். பிறருக்கு கொடுக்க வேண்டும். அதற்காக நாம் நல்வழியில் உழைக்க வேண்டும். இதை வேதாகமத்தில் நீதிமொழிகள் 21:5 - இல் ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.
நல்ல உயர்ந்த சிந்தனைகள் நம் உள்ளத்துக்குள் வரும்போது அதற்கான முயற்சிகள் எடுக்க ஆரம்பிப்போம். நம்முடைய செயல்களும் அவ்வாறே நல் வழியில் இருக்கும். நற்செயல்கள் செய்பவர்களை தேவன் மிகவும் நேசிப்பார். அதற்கேற்ற பலனை தேவன் பரத்தில் இருந்து அருள்செய்வார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 
எனவே, நம்முடைய எண்ணங்கள் உயர்வானவையாக இருக்கும்போது நம் எண்ணத்தின் படியே ஆகும். சிறந்ததையே எண்ணுவோம் சிறப்புடன் வாழ்வோம்.
- ஒய். டேவிட் ராஜா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT