வெள்ளிமணி

அஷ்டலட்சுமி யோகம் - மஹாலட்சுமி யோகம்!

லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் ராகுபகவான் நிற்க, குருபகவானுக்குக் கேந்திரத்தில் சந்திரபகவான் நிற்பதை அஷ்டலட்சுமி யோகம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

தினமணி

லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் ராகுபகவான் நிற்க, குருபகவானுக்குக் கேந்திரத்தில் சந்திரபகவான் நிற்பதை அஷ்டலட்சுமி யோகம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
லக்னத்திற்கு ஆறாமிடத்தில் ராகுபகவான் நின்று ராகுபகவானுக்கு சந்திரபகவான் கேந்திரம் பெறுவது முதல் தர யோகமாக கருதப்படுகிறது. சந்திரபகவானுக்கு ஆறாமிடத்தில் ராகுபகவான் நின்று, குருபகவானுக்கு சந்திரபகவான் கேந்திரம் பெறுவது இரண்டாம் நிலையாகச் சொல்லப்படுகிறது. முதல் தர யோகசாலிகள் 30-33 வயதுக்குள்ளேயே திட்மிட்ட உழைப்பு, எதிர்பாராத பணவரவுகளினால் திடீர் பணக்காரர்களாகி விடுகின்றனர். இரண்டாம் நிலை யோகசாலிகள் கடுமையாக உழைக்கின்றனர்; சம்பாதிக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு பணக்கார யோகமானது ஐம்பது வயத்திற்குமேல்தான் ஏற்படுகிறது. சந்ததிகளினால் கிடைக்கிறது. 
ராகுபகவானுக்கு 2,5,11 - ஆம் இடங்களில் ஒன்றில் சந்திரபகவான் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் நலம் கூடும். ஆறாமிட ராகுபகவான் இருக்குமிடத்தை லக்னமாகக் கொண்டு இரண்டாமிடம் (தனம் வாக்கு குடும்பம்) சந்திரபகவானுக்கு இரண்டாமிடப் பலன்களாக கணக்கிட்டோமானால், ஜாதகருக்கு நல்ல படிப்பு, பணிவு அதனால் உயர்வான பலன்களை ஜாதகர் பெற முடியும். அதோடு சந்திரபகவானுக்கு பன்னிரண்டாம் வீட்டில் ராகுபகவான் இருப்பது மஹா சக்தி யோகமாக கூறப்படுகிறது. ராகுபகவானுக்கு ஐந்தாம் வீட்டில் சந்திரபகவான் அமைந்தால் ஜாதகருக்கு நல்ல புத்தியும், ஞானவிருத்தியும் ஏற்படும். ராகுபகவானுக்கு லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் நிற்க, ஜாதகர் நல்ல குணவானாகவும் பணக்காரராகவும்  சத்புத்திர பாக்கியம் உடையவராகவும் திகழ்வார்.  ஆறாமிடத்து ராகுபகவான் ஆயுள் விருத்தியையும் லட்சுமி கடாட்சத்தையும் தருவார்.  
- தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT