முகப்பு
உலகம்

சீனாவில் நிலநடுக்கம்

பெய்ஜிங், ஜன.8: சீனாவின் வடகிழக்குப் பகுதியில் சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.  சீனத்தலைநகரான பெய்ஜிங்கிலிருந்து 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹுன்சுன் நகரில் சனிக்கிழமை காலை 7.34 மணியளவில் (இந

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:03 PM
பகிர்:

பெய்ஜிங், ஜன.8: சீனாவின் வடகிழக்குப் பகுதியில் சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

 சீனத்தலைநகரான பெய்ஜிங்கிலிருந்து 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹுன்சுன் நகரில் சனிக்கிழமை காலை 7.34 மணியளவில் (இந்திய நேரப்படி சுமார் காலை 10மணி) நிலநடுக்கம் ஏற்பட்டது.

 ரிக்டர் அலகில் 5.6 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் இருந்தது. நிலப்பரப்பின் கீழ் சுமார் 560 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

 ரிக்டர் அலகில் 6 முதல் 7 வரையிலான பல நிலநடுக்கங்களைக் கண்ட பகுதி இது.

 சனிக்கிழமை சம்பவத்தில் உயிரிழப்பு, பொருள்சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. பல ஹுன்சுன் நகரவாசிகளுக்கு நிலநடுக்கம் நிகழ்ந்தது கூடத் தெரியவில்லை.

 பூமிக்குக் கீழ் மிக ஆழத்தில் இந்த நிலநடுக்கம் இருந்ததால் மேல் நிலப்பரப்பில் எந்த சலனமும் உணரப்படவில்லை என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →