முகநூலில் முத்தப் புகைப்படம்: கைது செய்யயப்பட்ட ஓரின சேர்க்கை ஜோடி!
தாங்கள் முத்தமிடும் புகைப்படத்தை சமூகவலைத்தளமான முகநூலில் வெளியிட்ட ஓரினச் சேர்க்கை ஜோடி ஒன்று இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளது.
ஜகார்தா: தாங்கள் முத்தமிடும் புகைப்படத்தை சமூகவலைத்தளமான முகநூலில் வெளியிட்ட ஓரினச் சேர்க்கை ஜோடி ஒன்று இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான மக்கள் இஸலாமியர்களாக உள்ள இந்தோனேசியாவைப் பொறுத்தவரை ஓரினசேர்க்கை சட்டவிரோதமான செயல் கிடையாது. ஆனால் ஆபாச படங்கள் வெளியீடு, பரப்புதல் தொடர்பாக கடுமையான சட்ட திட்டங்களும், இணையதளங்களை நிர்வகிக்க விதிமுறைகளும் உள்ளன.
இந்த நிலையில்தான் ஓரின சேர்க்கை ஜோடி ஒன்று, அவர்கள் முத்தமிடும் புகைப்படத்தை சமூக வலைத்தளமான முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தது.
இந்த புகைப்படத்திற்கு முகநூலில் பல்வேறு தரப்பினரம் கடும்கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக அரசு சார்பில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுடபத்துறை முகநூல் நிர்வாகத்திடம் புகார் செய்தது. அதன் அடிப்படையில் அந்த புகைப்படம் உடனடியாக நீக்கப்பட்டது.
இதனிடையே அந்த குறிப்பிட்ட ஜோடி யார் ஐம்பது கண்டறியப்பட்டு, உடனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.